படுகொலை செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் - அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 10, 2024

படுகொலை செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் - அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றபோது, இலங்கையில் யுத்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கேள்விக்கு மேலும் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தமிழ் ஊடகவியலாளர்கள் மாத்திரம் அல்ல. சிங்கள மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் முன்னிக்கிறது .

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்க படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பல உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் அல்லது நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த குற்றச் செயல்கள் தொடர்பான ஆவணங்களும் பொலிஸ் காவலிலிருந்து காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது. தற்போது இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனவே, நாட்டில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி கிடைக்கும்.

எதிர்வரும் காலங்களில் நாட்டில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment