விரைவில் புதிய தொழில்நுட்பத்துடனான டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 10, 2024

விரைவில் புதிய தொழில்நுட்பத்துடனான டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்

புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தை துரிதமாக அறிமுகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (09) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேலும் 15 தீர்மானங்களுக்கு இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ஸ்மார்ட் அட்டை சாரதி அனுமதிப் பத்திர விநியோகம் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கடந்துள்ளதுடன், குறித்த நிறுவனங்களுக்கிடையேயான தரவுப் பரிமாற்ற வசதிகளை வழங்கி புதிய தொழிநுட்பத்திற்கமைய உலகில் பல நாடுகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவது சிறந்ததென அரசு கண்டறிந்துள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற அனுமதிப் பத்திரத்திற்குப் பதிலாக புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தை துரிதமாக அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அதுவரை சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்குத் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற முறைமையைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment