நள்ளிரவு வரை தாமரை கோபுரத்தை பார்வையிடலாம் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 22, 2024

நள்ளிரவு வரை தாமரை கோபுரத்தை பார்வையிடலாம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரத்தை பார்வையிடும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக முகாமைத்துவம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, தாமரை கோபுரம் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 09 மணி முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, 26 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையும் இது, திறந்திருக்கும்.

இவ்வருட இறுதி நாளான 31 ஆம் திகதி காலை 9.00 முதல் 2025 ஆம் ஆண்டின் ஆரம்ப நாளான ஜனவரி மாதம் 01 ஆம் திகதி அதிகாலை 01 மணி வரை தாமரைக் கோபுரம் திறந்திருக்கும்.

ஜனவரி மாதம் 01 ஆம் திகதி காலை 9.00 முதல் 02 ஆம் திகதி அதிகாலை 01 மணி வரையும் இக்கோபுரம் திறந்திருக்கும்.

No comments:

Post a Comment