ரஷ்யாவில் தஞ்சமடைந்தார் சிரிய ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Monday, December 9, 2024

ரஷ்யாவில் தஞ்சமடைந்தார் சிரிய ஜனாதிபதி

சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்தபோது, மனைவி, பிள்ளைகள் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்ற நிலையில், தற்போது ஆசாத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா ஆதரவு அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்பற்றியதைத் தொடர்ந்து ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு அளித்துள்ளதாக ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புதினின் வசிப்பிடமான க்ரெம்ளின் மாளிகை வட்டாரத் தகவலை சுட்டிக்காட்டி இத்தகவலை ரஷ்யாவின் இன்டர்ஃபேக்ஸ், டாஸ், ரியா நோவோஸ்டி பத்திரிகைகள் உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில் சிரியா விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ள ஜோ பைடன் “அதிபர் ஆசாத்தின் வீழ்ச்சி நீதியின் வெற்றி. இது பல ஆண்டுகளாக துண்பப்பட்டுவரும் சிரிய மக்களுக்கு கிடைத்துள்ள ஒரு வரலாற்று வாய்ப்பு. இந்த வாய்ப்பு அவர்கள் தங்கள் தேசத்தை வளமான எதிர்காலத்துக்காக கட்டமைக்க உதவும். அவர்கள் தங்கள் நாட்டை பெருமைமிகு அடையாளமாக மாற்ற உதவும்” என்று ஜனாதிபதி பைடன் வரவேற்றுள்ளார்

No comments:

Post a Comment