சட்டவிரோத செயற்பாடு, ஊழலை ஒழிக்க சுங்கத் திணைக்களத்தில் இரு செயலிகள் அறிமுகம் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 8, 2024

சட்டவிரோத செயற்பாடு, ஊழலை ஒழிக்க சுங்கத் திணைக்களத்தில் இரு செயலிகள் அறிமுகம்

சுங்கத் திணைக்களத்தில் சட்டத்துக்குப் புறம்பான விதத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிவர்த்தனைகளையும் தடுக்கவும், அனுமதி வழங்குவதில் தேவையற்ற தாமதங்களை தவிர்க்கவும் இரண்டு புதிய செயலிகள் (ஆப்ஸ்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள மேலதிகப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார். 

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களுக்காக ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் இறக்குமதியாளர் மற்றும் சுங்கத் துறையினர் சம்பந்தப்பட்ட கொள்கலனை இலங்கைக்கு இறக்குமதி செய்யும்போது அதன் செயற்பாடுகளை செயலியூடாக அறிய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, சரக்கு கொள்கலனின் செயல்பாடு, துறைமுகத்தில் இறக்கப்பட்டு விட்டதா? வரி செலுத்தும் தருணத்தில் இருக்கிறதா? இன்வொயிஸ் செய்யும் இடத்தில் இருக்கிறதா? துறைமுகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டதா? என்பதை அறிந்து கொள்ள முடியும் என்றார்.

இந்த செயலி தொடர்பான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், வாகன இறக்குமதிக்காக மற்றைய செயலி தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை திங்கட்கிழமை (09) முதல் இது ஆரம்பிக்கப்படுமெனவும் அருக்கொட தெரிவித்தார். 

இச்செயலிகளின் பிரகாரம் வாகனம் சட்ட ரீதியாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதா? என்பதை அதன் அடிச்சட்டக இலக்கத்தை பயன்படுத்தி சரிபார்க்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இதன்படி, நாட்டுக்குள் சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்வது தடை செய்யப்படுமென்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment