மாதாந்த எரிவாயு விலையில் மாற்றமா? - News View

About Us

About Us

Breaking

Sunday, December 1, 2024

மாதாந்த எரிவாயு விலையில் மாற்றமா?

மாதாந்த லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் என  லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கான விலை திருத்தம் இன்று (02.12.2024) அறிவிக்கப்பட உள்ளது.

இதேவேளை, கடந்த நவம்பர் மாதம் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாத நிலையில், கடைசியாக ஒக்டோபர் மாதத்திலேயே லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் செய்யப்பட்டது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாக திருத்தப்பட்டது.

அதேவேளை லாஃப்ஸ் நிறுவனமும் இன்று தமது எரிவாயு விலைத்திருத்தத்தை அறிவிக்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment