சேதமடைந்த வீதிகளை விரைவாக புனரமையுங்கள் - ஹிஸ்புல்லாஹ் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Monday, December 23, 2024

சேதமடைந்த வீதிகளை விரைவாக புனரமையுங்கள் - ஹிஸ்புல்லாஹ் எம்.பி

(எஸ். சினீஸ் கான்)

காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட அனர்த்தத்தினால் சேதமடைந்து காணப்படும் அனைத்து வீதிகளையும் விரைவாகப் புனரமைப்புச் செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்தார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கே.சிவகுமாரிடம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இந்த கோரிக்கையை விடுத்தார்.

இது தொடர்பான கூட்டம் காத்தான்குடி நகர சபை பிரதான மண்டபத்தில் இன்று (23) திங்கட்கிழமை இடம்பெற்றது.

கலந்துரையாடலில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கே.சிவகுமார், திட்டத்திற்கு பொறுப்பான வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் எம்.திலகரத்ன, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஏனைய அதிகாரிகள், காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயசிறீதர், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எஸ்.எம். அஸ்பர் உள்ளிட்ட அதிகாரிகள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

முதற்கட்டமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதிகளை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment