மின்சார கட்டணம் குறைப்பு : இன்று இறுதிக் கணக்கீடு - News View

About Us

About Us

Breaking

Thursday, December 5, 2024

மின்சார கட்டணம் குறைப்பு : இன்று இறுதிக் கணக்கீடு

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான திருத்தப்பட்ட யோசனையை இன்று (06) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தரவுகளின் மீளாய்வு தற்போது நிறைவடைந்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. 

இதன்படி, மின் கட்டணம் எவ்வளவு குறைக்கப்பட வேண்டும் என்பது குறித்து இன்று இறுதிக் கணக்கீடுகள் மேற்கொள்ளப்படுமென்றும் மின்சார சபை அறிவித்துள்ளது.

திருத்தப்பட்ட பிரேரணையை சமர்ப்பித்த பின்னர், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இலங்கை மின்சார சபை மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணையை முன்னர் சமர்ப்பித்திருந்த போதிலும், அதனை திருத்தியமைத்து மீண்டும் சமர்ப்பிக்க வேண்டுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment