வட மத்திய மாகாணத்தில் போலியான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல்களை சமர்ப்பித்து நியமனம் பெற்ற பட்டதாரி மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் 14 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வட மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்தார்.
வட மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றுவதற்காக கடந்த 1997ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 14 ஆசிரியர்களே பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் வட மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் எட்டு முதல் இருபத்தைந்து ஆண்டுகள் வரை பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களாக பணியில் இணையும் போது சமர்ப்பிக்கப்பட்ட க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர்தரம் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளதாக பிரதம அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்தார்.
மேலும் ,இந்த ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணங்களைச் சரிபார்க்க மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பணி இடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களில் சிலர் ஆசிரியர் பட்டம் பெறுவதற்காக வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் போலி பட்டதாரி சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளதாக வட மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment