(இராஜதுரை ஹஷான்)
பொதுத் தேர்தலில் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஈடுபடவிருப்பதால் தேசிய அடையாள அட்டை ஒருநாள் விநியோக சேவை உட்பட பொதுமக்களுக்கான எவ்வித சேவைகளும் வியாழக்கிழமை (14) வழங்கப்பட மாட்டாது என ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு வியாழக்கிழமை (14) நடைபெறவுள்ள நிலையில் திணைக்கள உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளனர். ஆகவே தேசிய அடையாள அட்டை உட்பட பொதுமக்களுக்கான எவ்வித சேவைகளும் வியாழக்கிழமை வழங்கப்பட மாட்டாது.
தேசிய அடையாள அட்டை உட்பட இதர சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வியாழக்கிழமை (14) திணைக்களத்துக்கு வருகை தருவதை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment