பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் : ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 12, 2024

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் : ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு தொடர்பாக விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.

குறித்த வர்த்தமானியானது, 2024.11.12 இன்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரில் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் முதலாவது அமர்வு நவம்பர் மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறும் என ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாவது பாராளுமன்றத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வுதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment