வாக்குச் சீட்டை புகைப்படம் எடுக்கத் தடை - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 13, 2024

வாக்குச் சீட்டை புகைப்படம் எடுக்கத் தடை

நாளை வியாழக்கிழமை (14) நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலில் குறிப்பிடப்படுவதாவது, பொதுத் தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும், வாக்குச் சீட்டுக்களையும் புகைப்படம் எடுத்தல், காணொளி எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் பதிவிடுதல் என்பன தேர்தல் சட்டங்களை மீறும் செயல்களாகும்.

எனவே, இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து சமூக ஊடக வலைத்தள கணக்குகளின் உரிமையாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.

No comments:

Post a Comment