பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய இம்ரான் எம்.பி : மந்த கதியில் அரசின் செயற்பாடுகள் என விசனம் - News View

About Us

About Us

Breaking

Friday, November 29, 2024

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய இம்ரான் எம்.பி : மந்த கதியில் அரசின் செயற்பாடுகள் என விசனம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா, மூதூர் மக்களுக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் இரண்டாயிரத்து இருநூற்றி ஐம்பது கிலோ கிராம்

(2250 KG) கோதுமை மாவினை இன்று (29) கிண்ணியா, மூதூர் பிரதேச செயலகங்களுக்கு வழங்கி வைத்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரதேச செயலகத்தின் நிவாரண பணிகளுக்கு உதவும் முகமாக ஒரு தொகை கோதுமை மா இன்று பிரதேச செயலகத்திடம் கையளிக்கப்பட்டது.

நாளையதினம் ஏனைய பிரதேச செயலகங்களுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு மேலதிகமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளை மாவட்டம் முழுவதும் எனது பிரதிநிதிகள் மூலம் முன்னெடுத்துள்ளேன்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தின் நிவாரண பணிகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மக்கள் கூறுவது போன்று அனர்த்த நிலைமைகளின்போது அரசின் செயற்பாடுகள் மந்த கதியிலயே நடைபெறுகின்றன. எனவே ஜனாதிபதி இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment