பொதுத் தேர்தல் கடமைகளுக்காக நீண்ட வார விடுமுறை முடித்துவிட்டு தங்களது பணியிடங்களுக்கு திரும்பும் பயணிகளுக்காக சிறப்பு ரயில்களை இயக்கத் ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
விசேட ரயில் சேவைகளை இன்றும் (17), நாளையும் (18) முன்னெடுப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, 7 சிறப்பு ரயில் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
பாராளுமன்ற தேர்தல் மற்றும் நீண்ட வார விடுமுறையில் சொந்த இடங்களுக்கு சென்றவர்கள், கொழும்பிற்கு திரும்புவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வழமையான ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக சில ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.
கொழும்பில் இருந்து பதுளைக்கு இன்று (17) இரவு 7.30 க்கும், பதுளையில் இருந்து கொழும்புக்கு இன்று (17) மாலை 05.30 க்கும் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கண்டி, பெலியத்தை மற்றும் மாத்தறை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து கொழும்புக்கும், கொழும்பில் இருந்து ஹிக்கடுவை வரையிலும் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், நாளைய தினம் (18) மாத்தறை, காலி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து கொழும்பு வரையில் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment