சர்வஜன அதிகாரம் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தலைவர் தொழிலதிபர் திலித் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டமைப்பின் தலைவரும், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான திலித் ஜயவீரவை கட்சியின் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க சர்வஜன பலய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக ‘சர்வஜன பலய’ கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்தை கூட்டணியின் செயற்குழு ஏகமனதாக எட்டியதாக ‘சர்வஜன பலய’ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, சர்வஜன பலய கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக திலித் ஜயவீரவை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அது தொடர்பான தீர்மானத்தை இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment