எல்பிட்டிய பிரதேச சபைக்கு தலைவர் நியமனம் : வெளியானது வர்த்தமானி - News View

About Us

About Us

Breaking

Friday, November 8, 2024

எல்பிட்டிய பிரதேச சபைக்கு தலைவர் நியமனம் : வெளியானது வர்த்தமானி

எல்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவரின் நியமனம் குறித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை நேற்று (08.11.2024) வெளியிட்டுள்ளது.

அதன்படி, எல்பிட்டிய பிரதேச சபையின் தலைவராக கொழும்ப தந்திரிகே நிஷாந்த பெரேராவும், உப தலைவராக வாகொட பதிரகே சுமித் சந்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு (NPP) வெற்றி கிடைத்தது.

இதற்கமைய, தேசிய மக்கள் சக்தி 17,295 வாக்குகளைப் பெற்று 15 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3 ஆசனங்களையும், பொதுஜன ஐக்கிய பெரமுன மற்றும் சுயேட்சைக்குழு தலா 2 ஆசனங்களையும் பெற்றன.

இது தவிர, பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி தலா ஒரு இடத்தைப் பெற்றுள்ளன.

இதன்படி, எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் இறுதி முடிவுடன் ஒப்பிடும்போது, ​​மொத்தமுள்ள 30 ஆசனங்களில் 15 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தியும், 15 ஆசனங்களை எதிர்க்கட்சியின் ஏனைய அனைத்துக் குழுக்களும் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

30 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் 1 சுயேட்சைக் குழுவும் இந்த தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment