அனுபவம் இல்லாதவர்களை அனுப்புவதால் எவ்வாறான பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் உணர வேண்டும் - அஸாத் சாலி - News View

About Us

About Us

Breaking

Friday, November 8, 2024

அனுபவம் இல்லாதவர்களை அனுப்புவதால் எவ்வாறான பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் உணர வேண்டும் - அஸாத் சாலி

எம்.ஆர்.எம்.வசீம்

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாட்டின் தொழிற்சங்களை கட்டுப்படுத்தியும் ஊடகங்களை அச்சுறுத்தியும் மக்களின் குரலை அடக்க முற்படுகிறது. அதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் என புதிய ஜனநாயக முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அஸாத் சாலி தெரிவித்தார்.

கொழும்பில் நடத்திய மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்கள். அவர்களால் செயற்படுத்த முடியாத வாக்குறுதிகளையும் வழங்கினார்கள். இவ்வாறு பொய் பிரசாரம் மேற்கொண்டே ஆட்சிக்கு வந்தார்கள்.

தற்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வழங்குமாறு கேட்கிறார்கள். அதிகாரத்துக்கு வந்தவுடன் மேற்கொள்வதாக தெரிவித்த எதனையும் இதுவரை செய்யவில்லை.

அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்ததில் இருந்து இதுவரை நாட்டை நிர்வகித்து வந்ததுபோலவே இதன் பின்னரும் நிர்வகிக்குமானால் இன்னும் ஓரிரு வருடங்களில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிடும் எமது அணிக்கே நாட்டின் ஆட்சியை பொறுப்பேற்க வேண்டிவரும்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாட்டின் தொழிற்சங்களை கட்டுப்படுத்தியும் ஊடகங்களை அச்சுறுத்தியும் மக்களின் குரலை அடக்க முற்படுகிறது. அதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம்.

எங்களுக்கு நாடு தொடர்பில் உணர்வு இருக்கிறது. அரசியல் நடவடிக்கைகளில் செயற்படும்போது சிறந்த அனுபவம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அரசியல் பயிலுனர்களால் மாத்திரம் நாட்டை நிர்வகி்க்க முடியாது.

அனுபவமுள்ளவர்களால் மாத்திரமே நாட்டை ஆட்சி செய்ய முடியும். தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒரு சிலருக்கே அரசியல் அனுபவம் இருக்கிறது. அதுவும் நாட்டை நிர்வகித்த அனுபவம் இல்லை.

கொழும்பு மாவட்டத்தல் போட்டியிடும் யாரும் அமைச்சர்களாகவோ அரச தரப்பிலோ இருந்ததில்லை. அதனால் மக்களுக்கு அறிமுகமில்லாத இவர்களுக்கு வாக்களிப்பது தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதால் எவ்வாறான பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேலும் கடந்த காலங்களில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அதற்கு எதிராக பாராளுமன்றத்தில் அநுரகுமார திஸாநாயக்கவே அதிகம் கதைத்தார்.

எரிபொட்களை வழங்க முடியுமான விலையை கணக்கு போட்டு காட்டியிருந்தார். தற்போது ஜனாதிபதியான பின்னர் இரண்டு தடவை எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்கள் தெரிவித்த பிரகாரம் விலை குறைவடையவில்லை.

இறுதியாக எரிபொருள் விலை குறைத்தபோதும் தனவந்தர்கள் பயன்படுத்தும் எரிபொருள் வகையில் மாத்திரமே விலை குறைப்பு இடம்பெற்றது. அதுவும் அவர்கள் தெரிவித்த அளவில் விலை குறைப்பு இடம்பெறவில்லை.

அதனால் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும் நாட்டை நிர்வகிக்க இவர்களிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை என்றார்.

No comments:

Post a Comment