அரசாங்கம் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும், சிறுவர்களின் பாேஷாக்குக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் - ராஜித்த சேனாரத்ன - News View

About Us

About Us

Breaking

Friday, November 8, 2024

அரசாங்கம் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும், சிறுவர்களின் பாேஷாக்குக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் - ராஜித்த சேனாரத்ன

திரிபோஷா நிறுவனத்தை மூடிவிட எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். இது சிறுவர்களின் பாேஷாக்கு தேவைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், திரிபோஷா நிறுவனத்தை மூடிவிடுவதற்கு அல்லது ஒடுக்கிவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. திரிபோஷா இந்த நாட்டில் பாரம் குறைந்த சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் போஷாக்கை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் வேலைத்திட்டமாகும்.

போஷாக்கு என்ற அடிப்படையில் நாங்கள் திரிபோஷா மாத்திரமே கொடுத்து வருகிறோம். அதனை நிறுத்துவது எதிர்காலத்தில் பாரிய போஷாக்கு குறைபாட்டு பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டியநிலை ஏற்படும்.

எமது நாட்டில் மாதம் ஒன்றுக்கு 1.6 மில்லியன் திரிபோஷா பொதி விநியோகிக்கப்படுகிறது. 2015 காலத்தில் இதன் அளவு 70 வீதமாகவே இருந்தது. என்றாலும் 2016 இல் நான் சுகாதார அமைச்சராக வந்தபோது யுனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் திரிபோஷா திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்தேன். இதன் மூலம் உற்பத்தி அளவை 100 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்தேன்.

திரிபோஷா நிறுவனம் இலாபமீட்டும் நிறுவனம் அல்ல. என்றாலும் திரிபோஷா போன்றே சுவபோஷா என்ற சத்துணவை அறிமுகப்படுத்தி இந்த நிறுவனத்தை இலாமீட்ட நடவடிக்கை எடுத்தேன்.

என்றாலும் நட்டத்தில் இருக்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் திட்டத்தில் திரிபோஷா நிறுவனமும் உள்ளடக்கப்பட்டபோது நான் தலையிட்டு அதனை நிறுத்தினேன். தனியார் நிறுவனங்கள் பல திரிபாேஷா நிறுவனத்தை விலைக்கு பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தது. என்றாலும் அதற்கு நாங்கள் இடமளிக்கவில்லை.

தற்போது மக்கள் விடுதலை முன்னணியின் விபாபாரிகள் சிலரே இந்த நிறுவனத்தை மூடிவிட ஜனாதிபதிக்கு ஆலாேசனை வழங்கி இருக்க வேண்டும். தற்போது இதனை மூடிவிட்டு சில காலங்களில் தனியாருக்கு விற்பனை செய்வதே இவர்களின் திட்டமாக இருக்கலாம்.

இடதுசாரி கொள்கையுடை ஜனாதிபதி ஒருவரின் ஆட்சியில், வறுமையில் இருக்கும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் திரிபாேஷா சத்துணவை நிறுத்த நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

No comments:

Post a Comment