பன்மைத்துவ இலங்கையே எமது நாடு என்ற எண்ணத்துடன் அமைதியாக வாக்களியுங்கள் - மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 12, 2024

பன்மைத்துவ இலங்கையே எமது நாடு என்ற எண்ணத்துடன் அமைதியாக வாக்களியுங்கள் - மனோ கணேசன்

இந்நாடு எமக்கும் உரித்துடைய சிங்கள, தமிழ், முஸ்லிம், பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ நாடு என்ற எண்ணங்களுடன் அமைதியாக அலைகளில் அள்ளுண்டு போகாமல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலில் வாக்களியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமுகூ தலைவர் மனோ கணேசன் மேலும் கூறி உள்ளதாவது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தல் இதுவாகும். இந்த தேர்தலின் முடிவு பல மாற்றங்களை கொண்டுவரும்.

இந்நாடு எமக்கும் உரித்து உடைய சிங்கள, தமிழ், முஸ்லிம், பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ நாடு என்ற அடிப்படை இந்த தேர்தலின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்த உறுதிப்படுத்தலை நாமே செய்ய வேண்டும். எமக்காக எவரும் செய்ய மாட்டார்கள்.

இந்நாட்டின் பன்மைத்துவத்தை நாமே எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளோம். பன்மைத்துவம் மறுக்கப்பட்டதால் நாம்தான் பெரிதும் பாதிக்கப்பட்டோம். ஆகவே பன்மைத்துவம் என்பது எமது கோஷம். இது பற்றி நாம் எவரிடமும் போதனைகளை கேட்டு பெற வேண்டியதில்லை.

ஆகவே இந்த சிந்தனைகளை மனதில் கொண்டு, அமைதியாக அலைகளில் அள்ளுண்டு போகாமல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலில் வாக்களியுங்கள். அதுவே இலங்கை திருநாட்டில் எமது எதிர்காலத்தை உறுதிப்படுத்தும்.

No comments:

Post a Comment