வாக்களிக்க சட்டவிரோதமாக பஸ்கள் ஏற்பாடு : மூன்று சாரதிகளும் அதன் நடத்துனர்களும் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, November 14, 2024

வாக்களிக்க சட்டவிரோதமாக பஸ்கள் ஏற்பாடு : மூன்று சாரதிகளும் அதன் நடத்துனர்களும் கைது

தேர்தல் சட்டத்தை மீறி, நுரைச்சோலையில் இருந்து முல்லைத்தீவுக்கு வாக்காளர்களை ஏற்றிச் செல்வதற்காக மூன்று பஸ்கள் தயார் நிலையில் இருந்த நிலையில், அவற்றின் மூன்று சாரதிகள் மற்றும் மூன்று நத்துனர்கள் நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 83 (1)ஆ பிரிவின் பிரகாரம் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபரான சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் மணல்தோட்டம், ஏஜி முகாம், ஏத்தாளை, கல்பிட்டி, மாம்புரி ஆகிய இடங்களில் வசிக்கும் 25 தொடரக்கம் 45 வயதுடையவர்கள்.

சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதி கல்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

(படங்கள் : கல்பிட்டி குமாரி பத்மலதா)

No comments:

Post a Comment