ரவூப் ஹக்கீமின் துரோகத்தனம் மக்களுக்கு விளங்குமா? : மனோ கணேசன் பின்னர்தான் அறிவார் - முகம்மது ரஸ்மின் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 6, 2024

ரவூப் ஹக்கீமின் துரோகத்தனம் மக்களுக்கு விளங்குமா? : மனோ கணேசன் பின்னர்தான் அறிவார் - முகம்மது ரஸ்மின்

பாறுக் ஷிஹான்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கண்டியில் பேசும்போது தான் 30 வருட பாராளுமன்ற வாழ்க்கையை விட்டு ஓய்வு பெறவிருப்பதாகவும் அதற்கு பிரதி ஈடாக பாரத் அருள்சாமியை எம்பியாக்க இருக்கிறாராம். எவ்வளவு துரோகத்தனம்? மக்களுக்கு விளங்குமா? இவர் பாரத் அருள்சாமியின் தோளின் மேல் ஏறி தான் எம்பியாவதற்கு தாளம் போடுகிறார். இதை மனோ கணேசன் பின்னர்தான் அறிவார் என "வி ஆ வண்" (we are one) அமைப்பின் இணைப்பாளர் மொகமட் ரஸ்மின் எச்சரிக்கை விடுத்தார்.

அம்பாறை ஊடக மையத்தில் சமகால அரசியல் தொடர்பாக நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, கண்டியில் நான்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலத்தில் வந்தார்கள். இன்று அது குறைந்ததே இவரால்தான். இவர் தான் எப்படியாவது எம்பி ஆக வேண்டும் என்பதே அம்பாறை போன்ற பிரதேசங்களில் தனித்து கேட்பதற்கு காரணம்.

நான் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸலாமில் வருகின்ற வாடகைப் பணம் யாரிடம் போகின்றது ? அங்கு ஊழியம் செய்கின்றவர்கள் யார்? இதனை மக்கள் அறிவார்களா? இவர்கள் அனைவரும் ஹக்கீமின் குடும்ப உறவினர்கள்.

தாருஸ்ஸலாமால் முஸ்லிம் சமூகத்திற்கு இதுவரை கிடைத்தது என்ன ? ஆக நோன்பு காலத்தில் குர்பான் கொடுப்பார்கள், கிழக்கில் தாருஸ்ஸலாம் அமைப்போம் என்றார்கள். எதைக் கிழித்தார்கள்? அங்குள்ள நிர்வாகிகள் 100 பேரும் அவருக்கு ஜால்ரா அடிப்பவர்களை சேர்த்து வைத்திருக்கின்றார். இவர்களால் சமூகத்துக்கு கிடைத்த நன்மைகள் என்ன?

யானை மனித மோதல் பற்றி கதைக்கிறார்கள். அண்மையில் சாய்ந்தமருதுக்குள் யானை வந்த போனது என்ன செய்தார்கள்?

இன்னமும் ஆதவன் பாட்டும் அஷ்ரப்பின் போட்டோவும் வைத்து மக்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள். அது இம்முறை செல்லுபடியாகாது என்பதனை அவர்கள் அறிய வேண்டும். அஷ்ரப்பின் வாழ்க்கையாவது எதிர்கால இஸ்லாமிய சந்ததிக்கு வழங்கினார்களா? இல்லை தேர்தல் காலத்தில் மாத்திரம் அவரது போட்டோ தேவைப்படுகிறது.

இன்று தேசிய மக்கள் சக்தி முஸ்லிம் வேட்பாளர்களால் என்ன செய்ய முடியும்? அவர்கள் இறுக்கமான கட்சி.அவர்களால் சுயாதீனமாக இயங்க முடியாது.

எனவேதான் முஸ்லிம்களுக்கு என்று பாராளுமன்ற உறுப்பினரை வரவழைக்க வேண்டுமானால் நல்லாட்சி தேசிய முன்னணியில் சுயாதீனமாக இயங்கக்கூடியவர்களை தெரிவு செய்யுங்கள். ஏனைய கட்சிகளில் இம்முறை எந்த முஸ்லிமும் வர முடியாது என்பதை நீங்கள் அறிய வேண்டும். எனவே நல்லாட்சி தேசிய முன்னணி கட்சிக்காக வாக்களியுங்கள் என்றார்.

No comments:

Post a Comment