முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தை திருத்த எந்த தேவையும் இல்லை - அரசாங்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 6, 2024

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தை திருத்த எந்த தேவையும் இல்லை - அரசாங்கம்

(எம்.மனோசித்ரா)

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. எடுக்கப்போவதுமில்லை. அதற்கான தேவையும் தற்போது ஏற்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (06) நடைபெற்றபோது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் தொடர்பில் வெவ்வேறு அமைப்புக்கள் வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. அவர்களது அந்த உரிமைகளை நாம் மதிக்கின்றோம்.

அதேபோன்று அரசாங்கம் என்ற ரீதியில் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எடுக்கப்போவதுமில்லை. அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பதற்கான தேவையும் ஏற்படவில்லை.

முஸ்லிம் மதத் தலைவர்கள், நிபுணர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்த பின்னரே சட்ட திருத்தங்கள் தேவையெனில் அதற்குரிய நடவடிக்கையை எடுக்க முடியும். எந்தவொரு மதம் குறித்த சட்ட திருத்தங்களும் இந்த அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment