அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியானார் டொனால்ட் ட்ரம்ப் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 6, 2024

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியானார் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முடிவுகளின் அடிப்படையில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 47ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க சட்டத்தின் பிரகாரம் 538 இலக்டோரல் கொலெஜ் வாக்குகளில் 270 வாக்குகளை பெற்றுக் கொள்ளும் வேட்பாளரே அமெரிக்க ஜனாதிபதியாவார்.

அமெரிக்காவில் வௌிவந்த தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஒக்லஹோமா, மிசௌரி, இண்டியானா, கென்டக்கி, டென்னஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, மேற்கு வேர்ஜினியா உள்ளிட்ட மாநிலங்களில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் 7 மாகாணங்களில் வடக்கு கரோலினா மற்றும் ஜோர்ஜியா ஆகிய இரண்டு மாநிலங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

கமலா ஹாரிஸ், கலிபோர்னியா, ஒரேகான், வொஷிங்டன் டிசி, நியூயோர்க், வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், மசாசூசெட்ஸ், மேரிலேன்ட், ஓரிகன், இல்லினாய்ஸ், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா உள்ளிட்ட மாநிலங்களை தன்வசப்படுத்தியுள்ளார்.

கலிபோர்னியாவில் வெற்றி பெற்றதன் மூலம் கமலா ஹாரிஸ் 54 கொலெஜ் வாக்குகளை வென்றுள்ளார்.

No comments:

Post a Comment