ரூபா 1000 கோடி நட்ட ஈடு கோரும் டக்ளஸ் தேவானந்தா ! - News View

About Us

About Us

Breaking

Monday, November 11, 2024

ரூபா 1000 கோடி நட்ட ஈடு கோரும் டக்ளஸ் தேவானந்தா !

விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பர் எனது நற்பெயருக்கும் என்மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக் கூடிய வகையில் பொய்யான விடயங்களை அல்லது சேறுபூசல்களை திட்டமிட்ட வகையில் ஊடகங்கள் வாயிலாக பரப்பியமைக்கு எதிராக 1000 கோடி ரூபா நட்ட ஈட்டினை கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தை நாட இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது விடயம் குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள விசேட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பவர் நேற்றையதினம் (10.11.2024) யாழ் ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் என்னைப்பற்றி முழுக்க முழுக்க உண்மையற்ற புனையப்பட்ட பொய்யான விடயங்களை கூறியுள்ளார்.

குறிப்பாக அவரது புனையப்பட்ட பரப்புரையானது பொய்யானதும் மற்றும் உண்மைக்கு மாறானதுமான கூற்று அமைந்துள்ளது.

இந்நிலையில் அவரின் இந்த பொய்யான கூற்றுக்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக எனது சட்டத்தரணிகளிடம் பாரப்படுத்தியுள்ளேன்.

இந்த பொய்யான மற்றும் என் நற்பெயருக்கும் என்மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்த அவரினது பொய்யான கூற்றிற்கு, 1000 கோடி ரூபா நட்ட ஈட்டினை பெற்றுக் கொள்வதற்காக நீதிமன்றத்தை நாட இருக்கின்றேன்.

இதேவேளை விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் தான் கூறிய விடயங்கள் பிழை என்றும் உண்மைக்கு மாறான விடயம் என்றும் பத்திரிகையாளர் மாநாட்டினூடாக அல்லது அறிக்கையின் ஊடாக உடனடியாக அறிவிக்க தவறும் பட்சத்தில், அவருக்கு எதிராக 1000 கோடி ரூபா நட்டஈடு கோரி சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்பதனை கூறிக் கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment