பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Friday, October 18, 2024

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்னவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவினால் இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

அத்தோடு ஆணைக்குழுவின் உப தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கே.எல். வசந்த குமார நியமிக்கப்பட்டிருப்பதோடு, அதன் ஏனைய உறுப்பினர்களாக சிரேஷ்ட பேராசிரியர்களான ராஹுல அதலகே, ஓ.ஜீ. தயாரத்ன, சுப்ரமணியம் ரவிராஜ், சட்டத்தரணி கே.சீ.டபிள்யூ. உனம்புவ உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன தனது கடமைகளை இன்று (18) பொறுப்பேற்றுக்கொண்டார்.

சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அண்மையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் தங்களது பதவியில் இருந்து விலகியதை அடுத்து, சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment