எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் அமைச்சரவைப் பேச்சாளரும், முன்னாள் போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
20 வருடங்களுக்கு மேலாக ஹோமாகம தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குள் வந்த அவர் பிரதியமைச்சர், அமைச்சரவை அமைச்சர் என பல பதவிகளை வகித்துள்ளார்.
பல வருடங்களாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகள் இன்றி அநாதரவாக இருந்த ஹோமாகம பிரதேசத்தை அறிவு மையமாக நகராக மாற்றுவதற்கு இயன்ற அனைத்தையும் செய்துள்ளதாகவும் அதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் மற்றுமொரு பட்டப்படிப்பை மேற்கொள்ளவுள்ளதுடன் திரைப்பட தயாரிப்பிலும தனது ஆர்வத்தை செலுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment