பரீட்சை மோசடிகளில் 473 பேர் ஈடுபட்டுள்ளனர் - இலங்கை ஆசிரியர் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 3, 2024

பரீட்சை மோசடிகளில் 473 பேர் ஈடுபட்டுள்ளனர் - இலங்கை ஆசிரியர் சங்கம்

பரீட்சை மோசடிகளில் 473 பேர் ஈடுபட்டுள்ளதால் பரீட்சைகள் திணைக்களத்தை முழுமையாக மாற்றியமைக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், 2024 ஆம் ஆண்டு பரீட்சைகள் சம்பந்தமான மோசடிகளில் ஈடுப்பட்ட 473 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அவர்கள் எந்தவொரு பரீட்சைகளின் போதும் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில், பிரதேச பணிப்பாளர் நாயகம் மற்றும் மூத்த அதிகாரிகளின் பெயர்களும் அடங்குகின்றது.

எனவே, தற்போதைய சூழ்நிலையில், பரீட்சைகள் திணைக்களத்தை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment