"கோட்டாவின் கையாட்கள் களமிறக்கம்" - ரிஷாட் பதியுதீன் - News View

About Us

About Us

Breaking

Monday, September 9, 2024

"கோட்டாவின் கையாட்கள் களமிறக்கம்" - ரிஷாட் பதியுதீன்

சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதுகாப்பான ஆட்சியைக் கொண்டுவருவதற்காக நாம் ஒன்றுபட்டுள்ளபோது, கோட்டாவின் கூலிப்படைகள் நமது மக்களை கூறுபோடுவதற்கு களமிறக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, தோப்பூரில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டதாவது,

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நால்வருக்கே போட்டி. இதில், ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்திலேயே உள்ளார். முதலாமிடத்திலுள்ள சஜித்தை முந்திச் செல்வதற்கு அனுர முயற்சிக்கிறார். இதை நாம் அனுமதிக்க இயலாது. கடந்தகால அனுபவங்களிலிருந்து படிப்பினை பெறுவது அவசியம்.

ஜனாஸாக்களை எரிக்கின்றபோது, பேசாமடந்தைகளாக இருந்த கோட்டாவின் கையாட்களே ரணிலின் அமைச்சரவையில் உள்ளனர். இதனால்தான், ரணிலை எதிர்க்கிறோம்.

இம்மாவட்டத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. எமது வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் இவை பற்றிச் சொல்லியுள்ளோம். செல்வநகரில் தண்ணீருக்கு பிரச்சினைகள் உள்ளன. தோப்பூர், குச்சவெளி உள்ளிட்ட திருகோணமலை மாவட்டக் கிராமங்களின் பிரச்சினைகள், சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் தீர்க்கப்படும்.

ஆகையால், எதிர்வரும், சனிக்கிழமை வீடு வீடாகச் சென்று சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தேடுங்கள். எமது நாட்டின் வளமான எதிர்காலத்துக்காக, அனைவரும் ஒன்றுபட்டு சஜித் பிரேமதாசவை வெல்ல வைப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment