தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட வாய்ப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 30, 2024

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட வாய்ப்பு

ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் இலவசமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை வளாகத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணிவரை பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துதல், இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த மனப்பான்மையை மேம்படுத்துதல், குழந்தைகளின் திறன்களை மேம்படுத்துதல், பொழுதுபோக்கை வழங்குதல் போன்ற பல நோக்கங்களின் அடிப்படையில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment