மொணராகலை மாவட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமாரசிறி ரத்நாயக்கவின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளதானதாக மொணராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (29) மொனராகலை பிபில வீதியின் நக்கலவத்தை பகுதியில் முன்னாள் எம்.பி. குமாரசிறி ரத்நாயக்க குறித்த வாகனத்தை செலுத்திச் சென்றுள்ள நிலையில் வாகனத்திற்குள், குளவி ஒன்று புகுந்துள்ளது.
குறித்த குளவியை கையால் விரட்ட முற்பட்டபோது வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ள நிலையில் வீதியை விட்டு விலகிய குறித்த வாகனம் வீதியோரத்தில் இருந்த மண் குவியலில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு காயம் ஏற்படவில்லை. ஆயினும் அவரது வாகனம் சேதமடைந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொணராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
டி.எஸ்.குணதிலக்க
No comments:
Post a Comment