பல அரச நிறுவனங்களில் காணாமல்போன மற்றும் இடந்தவறி வைக்கப்பட்டுள்ள 4,000 க்கும் அதிகமான வாகனங்கள் தொடர்பில், விசேட கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.ஜி.சி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முழுமையான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கிய வகையில் விசேட கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை உண்மையில் பயன்படுத்தியவர்கள் யார் என்பதைக் கண்டறிவதற்காக ,தகவல்களை ஆய்வு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 1794 வாகனங்கள் காணாமல்போய் அல்லது இடந்தவறி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கண்டறியப்படவுள்ளது.
அத்தோடு இந்த அமைச்சுக்கு உட்பட்ட 679 கார்கள் மற்றும் 1115 மோட்டார் சைக்கிள்கள் காணவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், கல்வி அமைச்சுக்கு சொந்தமான 212 வாகனங்கள், நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான 880 வாகனங்கள், தபால் துறைக்குச் சொந்தமான 45 வாகனங்கள்.
காணாமற்போனவை அல்லது இடம்பெயர்ந்தவை என கணக்காய்வு விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய மாவீரர்களுக்கான 1077 வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment