பிரிட்டனைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஒருவர் ஸ்கை டைவிங் எனப்படும் வான் சாகசத்தில் ஈடுபட்டு புதிய உலக சாதனை புரிந்துள்ளார்.
சஃபோல்கில் உள்ள பென்ஹால் கிரீன் கிராமத்தைச் சேர்ந்த மானெட் பெய்லி எனும் அந்த மூதாட்டி, தனது 102ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்தச் சாகசத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், மூன்று தொண்டு நிறுவனங்களுக்குப் பணம் திரட்டுவதற்காகவும் இந்தச் சாதனை முயற்சியை அவர் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பெய்லி, கிட்டத்தட்ட 2,100 மீற்றருக்கும் அதிகமான உயரத்திலிருந்து குதித்து இந்தச் சாகசத்தைப் புரிந்ததாகவும் இந்தச் சாதனை முயற்சியின் மூலம் 30,000 பவுன்ஸ் திரட்ட திட்டமிட்டிருந்ததாகவும் கிட்டத்தட்ட 14,000 பவுன்ஸ் (S$24,000) திரட்டியுள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இதன் மூலம், 2017ஆம் ஆண்டு மே மாதம், 101 வயது முதியவர் வெர்டுன் ஹேஸ், நிகழ்த்திய சாதனையை முறியடித்து அதிக வயதில் வான் சாகசத்தில் ஈடுபட்ட பிரிட்டனைச் சேர்ந்தவர் எனும் பெருமையைத் பெய்லி பெற்றார் என ‘தி கார்டியன்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment