ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவரான, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் சற்றுமுன்னர் விஜயம் செய்த அவர், ஜனாதிபதியைச் சந்தித்து ஆதரவு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்வதற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment