சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்ய தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 21, 2024

சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்ய தீர்மானம்

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட 20 இலட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் ஸ்மார்ட் சிப் இல்லாமல் எட்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டியவையென மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அச்சிட முடியாத சுமார் 3,00,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் குவிந்து கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் புத்தகங்கள் மற்றும் வெள்ளை அட்டைகளில் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 14 இலட்சம் கனரக வாகன அனுமதிப்பத்திரங்களெனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு புள்ளிகளை சேர்க்கும் டி மெரிட் முறையும், மதிப்பெண் பெற்ற சாரதிகளின் அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்யும் முறையும் அடுத்த சில மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எனவே, பழைய சாரதி அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்போர் போக்குவரத்து மருத்துவ சான்றிதழைப் பெற்று புதிய சாரதி உரிமம் பெற விண்ணப்பிக்கலாமென்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment