லக்ஷ்மன் கிரியெல்ல ஊடகவியலாளர்களை இழிநிலைக்கு தள்ளியுள்ளார் - மனுஷ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 7, 2024

லக்ஷ்மன் கிரியெல்ல ஊடகவியலாளர்களை இழிநிலைக்கு தள்ளியுள்ளார் - மனுஷ நாணயக்கார

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு பரிசு வவுச்சர்களை வழங்கி கூட்டத்துக்கு அழைத்து வந்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் கூறியதன் மூலம் ஊடகவியலாளர்களை மிகவும் கீழ் மட்ட இழிநிலைக்கு தள்ளியுள்ளதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (06) கொழும்பில் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை ஜனாதிபதியுடன் கலந்தாலோசிக்க சந்திப்பொன்று அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு ரூ. 5,000 பெறுமதியான பரிசு வவுச்சர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதாக நேற்று பாராளுமன்றத்தில் கூறியதன் மூலம், ஊடகவியலாளர்களை லக்ஷ்மன் கிரியெல்ல இழிநிலைக்கு தள்ளியுள்ளதாக, அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment