ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் - News View

About Us

About Us

Breaking

Monday, August 5, 2024

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த இலங்கை அணியின் முன்னாள் வீரர்

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ஹஷான் திலகரத்ன ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான ஹஷான் திலகரத்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இன்று (05) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

ஹஷான் திலகரத்ன பங்களாதேஷ் கிரிக்கெட் மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளர்களாகவும் தற்போது அவர் கடமையாற்றி வருகிறார்.

அவரது பாரியாரும், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏற்பாட்டாளராகவும் கடமையாற்றிவரும் திருமதி அப்சாரி சிங்கபாகு திலகரத்னவும் இன்றையதினம் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

No comments:

Post a Comment