தொழில்நுட்பம், அழகியல் பாடங்களை நீக்குவது முட்டாள்த்தனமான செயல் - சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 23, 2024

தொழில்நுட்பம், அழகியல் பாடங்களை நீக்குவது முட்டாள்த்தனமான செயல் - சஜித் பிரேமதாச

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தத்தின்படி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், அழகியல் பாடங்களை நீக்குவது முட்டாள்த்தனமான செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், 2006 ஆம் ஆண்டில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்ற பாடம், முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தத்தில் பரீட்சை திணைக்களத்தால் மதிப்பிடப்பட்ட 7 முக்கிய பாடங்களுக்குள் உள்ளடக்கப்படவில்லை.

இலங்கையை டிஜிட்டல் இலங்கையாக உருவாக்கும் நோக்கில் செயற்படும் இவ்வேளையில், இவ்வாறான முட்டாள்த்தனமான முடிவுகளை எடுக்கக்கூடாது

முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தத்தின்படி, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்ற பாடத்தை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களில் ஒன்றாக அதனை உள்ளடக்குவதில்லை என தீர்மானித்துள்ளனர்.

ஆனால் மாறிவரும் தொழில்நுட்ப யுகம் உருவாகியுள்ள இவ்வேளையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பம் என்ற பாடம் உள்ளடக்கப்பட வேண்டும். அவ்வாறே அழகியல் பாடத்தையும் நீக்கியுள்ளனர்.

எனவே இந்தப் பாடங்களை நீக்குவது தொடர்பாக அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் முட்டாள்த்தனமான செயல். எனவே இது குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனறார்.

No comments:

Post a Comment