கடமைகளை பொறுப்பேற்றார் சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 9, 2024

கடமைகளை பொறுப்பேற்றார் சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை புதிய வைத்திய அத்தியச்சராக கோபால மூர்த்தி ரஜீவ் இன்று (09) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து நேற்று (08) நண்பகல் வெளியேறிச் சென்றார்.

பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக நேற்றுமுன்தினம் (07) இரவு முதல் நேற்று நண்பகல் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment