இந்திய கிரிக்கட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக கௌதம் கம்பீர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 9, 2024

இந்திய கிரிக்கட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக கௌதம் கம்பீர்

முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்திய கிரிக்கட் சபையின் செயலாளர் ஜே ஷாஹ் இதனை அறிவித்துள்ளார். 

நவீன காலத்தில் கிரிக்கட் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த மாற்றங்களில் கூடுதல் கவனம் செலுத்திய நபராக கௌதம் கம்பீர் உள்ளார். 

தனது வாழ்நாளில் கிரிக்கட் விளையாட்டின்போது பல கதாபாத்திரங்களை வகித்துள்ள அவர் அதனூடாக இந்திய அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக ஜே ஷாஹ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்வதில் கௌதம் கம்பூர் சிறந்த நபராக திகழ்வார் என்பதே தனது நம்பிக்கையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment