நாட்டில் முதியோரின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட மருத்துவ நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இலங்கையில் சாதாரணமாக ஒருவரின் ஆயுட்காலம் 79 வயதுக்கு மேல் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இடம் பெற்றுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் எமது நாட்டில் முதியோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றது.
நாட்டில் சராசரி ஆயுட்காலம் 79.7 வயதாக காணப்படுகிறது. அந்த வகையில் பெண்களின் வயது 83 ஆக அதிகரித்துள்ளது. இதனால், முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அனைத்து மாகாண வைத்தியசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்காக சுமார் 70 பில்லியன் ரூபா நிதி செலவிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment