இந்தியா பயணமானார் ஜனாதிபதி ரணில்! - News View

About Us

About Us

Breaking

Saturday, June 8, 2024

இந்தியா பயணமானார் ஜனாதிபதி ரணில்!


இன்று (09) மாலை நடைபெறவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை இந்தியா பயணமாகியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின் பிரகாரம் அவர் இந்தியாவின் புதுடில்லி நோக்கி பயணமாகியுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (09) காலை இந்தியன் ஏர்லைன்ஸின் AI-282 விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணித்துள்ளார்.

இலங்கை இராஜதந்திரிகளை ஏற்றிச் செல்லும் இந்த விமானம் முற்பகல் 11.40 மணிக்கு இந்தியாவின் புதுடெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கைக்கு அமைய, பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலத்திற்கான பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக தெற்காசிய தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முஹம்மது முயிசு, சிசெல்ஸ் துணை ஜனாதிபதி அகமத் ஆபிப், பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனா, மொரிசியஸ் பிரதமர் பிரவீந் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமால் தஹல் பிரசண்டா மற்றும் பூட்டான் பிரதமர் சேரிங் டொப்கே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment