துல்ஹஜ் மாத தலைப்பிறை இன்றையதினம் (07) நாட்டின் சில பகுதிகளில் தென்பட்டுள்ளது.
அதற்கமைய, இஸ்லாமிய வருடமான ஹிஜ்ரி 1445 துல்ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாளான (பிறை 10) எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதி, ஹஜ்ஜுப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (07) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை பிறைக்குழு ஆகியன இணைந்து இவ்வறிவிப்பை ஏகமனதாக வெளியிட்டுள்ளது.
தலைப் பிறை தீர்மானிக்கும் மாதாந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழு உறுப்பினர்கள், பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், இலங்கை வக்பு சபை, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் அதன் பிறைக் குழு உறுப்பினர்கள், மேமன், ஹனபி பள்ளிவாசல் பிரதிநிதிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment