தபால் சேவை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் தேங்கிக் கிடக்கும் 15 இலட்சம் கடிதங்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, June 14, 2024

தபால் சேவை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் தேங்கிக் கிடக்கும் 15 இலட்சம் கடிதங்கள்

தபால் சேவை ஊழியர்களின் பணிப்கிஷ்கரிப்பால் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கடிதங்களை எதிர்வரும் 2 நாட்களுக்குள் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிணைந்த தபால் ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளருடன் நேற்று (13) கலந்துரையாடியபோது எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஊழியர்களை சேவையில் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கான தீர்வை வழங்க அரசாங்கத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திதி வரை கால அவகாசம் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

24 ஆம் திகதியன்று ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஒன்றிணைந்த தபால் ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார கூறியுள்ளார்.

தபால் ஊழியர்களின் 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கை இன்றுடன் நிறைவுக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment