தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கான வர்த்தமானி வௌியீடு - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 1, 2024

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கான வர்த்தமானி வௌியீடு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்குவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் 1,350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகை வரவு செலவுத்திட்ட நிவாரண கொடுப்பனவை உள்ளடக்கியுள்ளதாகவும் இது ஊழியர் சேமலாப நிதியம், நம்பிக்கை நிதிய கொடுப்பனவிற்கும் ஏற்புடையது எனவும் வர்த்தமானியில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த விசேட கொடுப்பனவாக 350 ரூபா வழங்கப்படவுள்ளது.

அதனடிப்படையில், நாளாந்த மொத்த கொடுப்பனவு 1,700 ரூபா வழங்கப்படும் எனவும் மேலதிக ஒரு கிலோவிற்கு 80 ரூபா வீதம் வழங்கப்படும் எனவும் விசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment