சீமெந்து விலை குறைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 1, 2024

சீமெந்து விலை குறைப்பு

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலையை குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 50 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை திருத்தத்தின்படி சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 2,400 ரூபாவாக இருக்கும் என அந்த நிறுவனங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

குறித்த விலைத் திருத்தம், உள்ளூர் கட்டுமானத் தொழிலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, செலவுப் பலனை நுகர்வோருக்கு வழங்குவதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment