கட்டுநாயக்கவில் 7 கோடியே 35 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் சிக்கிய பெண் - News View

About Us

About Us

Breaking

Monday, May 20, 2024

கட்டுநாயக்கவில் 7 கோடியே 35 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் சிக்கிய பெண்

7 கோடியே 35 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

57 வயதுடைய பாகிஸ்தான் நாட்டு பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்று (20) காலை 9.45 மணியளவில் அபுதாபியிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இவர் கொண்டுவந்த பயணப் பொதியிலிருந்து 2 கிராம் 450 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment