விமான நிலையத்தில் வெடித்த T56 துப்பாக்கி : இலங்க விமானப் படை வீரர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 30, 2024

விமான நிலையத்தில் வெடித்த T56 துப்பாக்கி : இலங்க விமானப் படை வீரர் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப் படையின் விமானப் படை வீரர் ஒருவரின் துப்பாக்கியொன்று செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (30) காலை 10.25 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் விமானப் படை வீரரின் கையிலிருந்த T-56 ரக துப்பாக்கியே தவறுதலாக செயற்பட்டுள்ளதாகவும் இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

இந்நிலையில், குறித்த துப்பாக்கி செயற்பட்டதனால் விமான நிலைய முனையமொன்றின் உட்கூரையில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின், விசேட விருந்தினர் பகுதியான VIP Lounge Gold Route முனைய பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உலகின் முன்னணி வர்த்தகர்கள் மற்றும் பணம் செலுத்தி வசதிகளைப் பெறும் நபர்கள் இந்த முனையத்தின் ஊடாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில், குறித்த விமானப் படை வீரர், இலங்கை விமானப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மற்றும் இலங்கை விமானப் படையினர் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment