மனோ கிளிநொச்சி, ராதா கொழும்பு, திகா தலவாக்கலை - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 30, 2024

மனோ கிளிநொச்சி, ராதா கொழும்பு, திகா தலவாக்கலை

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், கிளிநொச்சியில் நடைபெறும் தமிழர் ஐக்கிய மே தின ஊர்வலத்தில் மற்றும் தமிழ் தேசிய மே தின விழாவில் சிறப்பு பேச்சாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் அழைப்பை ஏற்று கலந்துகொள்கிறார்.

கூட்டணியின் பிரதித் தலைவர் வே. இராதாகிருஷ்ணன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதியாக, கொழும்பில் நடைபெறும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் மே தின விழாவில் கலந்து கொள்கிறார்.

கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் தலவாக்கலையில் நடைபெறும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி ஊடகங்களிடம் கூறியுள்ளதாவது, மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில்உள்ள நமது கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரை கொழும்பில் நடைபெறும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் மே தின விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறேன்.

மத்திய, ஊவா மாகாணங்களில் வாழும் நமது கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரை தலவாக்கலையில் நடைபெறும் மே தின கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன்.

கிளிநொச்சி, வன்னி உட்பட வட மாகாணத்தில் வாழ்கின்ற நமது கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரை கிளிநொச்சியில் நடைபெறும் தமிழர் ஐக்கிய மே தின ஊர்வலத்தில் மற்றும் தமிழ் தேசிய மே தனி விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன்.

No comments:

Post a Comment