விழா முற்பணத் தொகையை அதிகரிக்குமாறு கோரிக்கை : சலுகைகளை உயர்வாக வழங்குவதால் மன அழுத்தமும் குறையும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 20, 2024

விழா முற்பணத் தொகையை அதிகரிக்குமாறு கோரிக்கை : சலுகைகளை உயர்வாக வழங்குவதால் மன அழுத்தமும் குறையும்

அரச ஊழியர்களுக்கு கடந்த பல வருடங்களாக வழங்கப்படுகின்ற 10,000 ரூபாய் விழா முற்பணத்தின் தொகையை 20,000 ரூபாயாக உயர்வாக வழங்கக்கோரி அரச ஊழியர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

நாட்டின் பொருளாதார நிலைமை நாளுக்குநாள் மாற்றமடைந்து வருகின்ற இந்நிலைமையில், கடந்த பல வருடங்களாக வழங்கப்பட்டு வருகின்ற விழா முற்பணத் தொகை அதே 10,000 ரூபாவாக இன்றும் இருக்கின்றது. இந்த 10,000 ரூபாவுக்கு இரு சேட் கூட வாங்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில்தான் இன்றைய அரச ஊழியர்களின் நிலை காணப்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த பல வருடங்களுக்கு முன்னர் அரச ஊழியன் என்றால் அவர்களுக்கென்று ஒரு தனியான மதிப்பும், மரியாதையும், கெளரவமும் இருந்து வந்தன. இன்று அந்த நிலை, தலை கீழாக மாறியுள்ளது. இது பெரும் தாக்கத்தை எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, இன்றைய அரசாங்கமும் அரச ஊழியர்களின் விடயங்களில் அதிக கவனம் செலுத்தி அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளை உயர்வாக வழங்கி வைப்பதன் மூலம் அரச சேவைகளை இன்னுமின்னும் உயர்வாகப் பெறுவதோடு, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்திலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

அபு அலா

No comments:

Post a Comment