நெல் கொள்வனவுக்கு 50 கோடி ரூபா ஒதுக்கீடு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 17, 2024

நெல் கொள்வனவுக்கு 50 கோடி ரூபா ஒதுக்கீடு

நெல் கொள்வனவு நடவடிக்கைகளுக்காக 50 கோடி ரூபாவை அரசாங்கம் வழங்குமென்று விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய 50 கோடி ரூபாவை திறைசேரி வழங்கவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மாவட்டங்கள் தோறும் நெல் களஞ்சியசாலைகளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆகக் குறைந்தது 02 களஞ்சியசாலைகளை திறக்கவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதற்கட்ட நடவடிக்கையாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சிவப்பு நாடு கொள்வனவு செய்ததாகத் தெரிவித்த அமைச்சர், ஹம்பாந்தோட்டையில் 03 நெல் களஞ்சியசாலைகள் திறந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக தெரிவித்த நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட, நெல் சந்தைப்படுத்தல் சபையின் 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நெல் கொள்வனவை ஆரம்பித்துள்ளதாகவும் சிவப்பு நாடு நெல் ஒரு கிலோகிராம் 150 ரூபா உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்வதாக கூறினார்.லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment